பிரிகேடியர் துர்க்கா அவர்கள் வலிகாமம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை கலைச்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சோதியா படையணியின் சிறப்புத் தளபதியாகக் கடமையாற்றினார். 4 ஏப்ரல் 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரத்தில் சிறிலங்கா படைகளின் பாரிய முற்றுகைக்கெதிராக தீரமுடன் களமாடி வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.