துணைப்படை வீரர் வீரவேங்கை லோகிதன் அவர்கள் 6-ஆம் கட்டை, உன்னிச்சை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். கந்தசாமி மேகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 29 ஜூலை 2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கரடியனாறு தேனகம் மீதான சிறிலங்கா வான்படையின் குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.