கப்டன் பாவரசன் அவர்கள் செம்மண்குன்று, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். ஆனந்தன் பிரபு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஜூலை 2007 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.