லெப்டினன்ட் செங்கோலன் அவர்கள் கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். கணபதிப்பிள்ளை சிவநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.