2-ஆம் லெப்டினன்ட் புரட்சி அவர்கள் ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆழ்வாப்பிள்ளை ரூபனேந்திரராதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.