2-ஆம் லெப்டினன்ட் மூவேந்தன் அவர்கள் வள்ளுவர்புரம், ரெட்பானா, விசுவமடு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சத்தியநாதன் கமலேந்திரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 3 ஜூன் 2007 அன்று மன்னார் மாவட்டம் முள்ளிக்குளப் பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்டிலறி ஏவுதளம் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.