வீரவேங்கை மலரவன் அவர்கள் 7-ஆம் வட்டாரம், விடத்தல்தீவு, மன்னாரைச் சேர்ந்தவர். தவநேசன் மேபிள்றெஷான் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஆகஸ்ட் 2006 அன்று யாழ். மாவட்டத்தில் சிறிலங்கா படையினரின் வலிந்த தாக்குதலிற்கெதிரான முறியடிப்புச் சமரின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.