மேஜர் புகழன் அவர்கள் தன்னாமுனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சிவலிங்கம் சுரேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 பிப்ரவரி 2005 அன்று பொலநறுவை வெலிகந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரும் தேசவிரோதிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.