லெப்.கேணல் கௌசல்யன் அவர்கள் பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இளையதம்பி லிங்கராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார். 7 பிப்ரவரி 2005 அன்று பொலநறுவை வெலிகந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினரும் தேசவிரோதிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.