கப்டன் கிளிமொழி அவர்கள் 10-ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஜோசெப்பெர்னாண்டோ மேரிஜெயானி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 9 ஜனவரி 1997 அன்று கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் - ஆனையிறவு படைத்தளங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.