மேஜர் திருமாறன் அவர்கள் உப்புவெளி, திருகோணமலையைச் சேர்ந்தவர். பாலசுப்பிரமணியம் சிவகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 ஜூலை 1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.