2-ஆம் லெப்டினன்ட் அறிவு (சுரேக்கா) அவர்கள் வட்டக்கண்டல், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். நாராயணன் தனலச்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 ஏப்ரல் 1996 அன்று யாழ். மாவட்டம் ஆனைக்கோட்டைப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.