மேஜர் வெண்ணிலவன் (அசோகன்) அவர்கள் சாவகச்சேரி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணபிள்ளை அருந்தவநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 5 அக்டோபர் 1998 அன்று யாழ். மாவட்டம் வேலணைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுற்றிவளைப்பின் போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.