மாவீரர் சாள்ஸ் (தம்பி) அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபாகரன் சாள்ஸ் அன்ரனி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கேணல் ராயு படைய அறிவியல், தொழினுட்ப ஆய்வு நிறுவனத்தின் சிறப்புப் பொறுப்பாளர் கடமையாற்றினார். 18 மே 2009 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் சிறிலங்கா படைகளின் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராக தனது இறுதி மூச்சுவரை களமாடி இவர் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.