மேஜர் ஆதித்தன் அவர்கள் தங்கபுரம், அலம்பில், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சின்னப்பு ஜெயதாஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 நவம்பர் 1992 அன்று வவுனியா மாவட்டம் செட்டிகுளப் பகுதியில் சிறிலங்கா படைக் காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக தேசத்தின் விடுதலைக்காக ஆயிரமாயிரம் புலி வீரர்கள் களமாடி வீழ்ந்தார்கள். எமது வீர மண்ணின் மார்பைப் பிளந்து அந்த வீரர்களைப் புதைத்தோம். உயிரற்ற சடலங்களாக அவர்கள் மண்ணிற்குள் மறையவில்லை. விடுதலையின் விதைகளாகவே எமது தாயின் மடியில் அவர்களைப் புதைத்தோம்.