லெப்டினன்ட் இசைவாணன் (மீரான்) அவர்கள் நீதிபுரம், மாங்குளம், முல்லைத்தீவைச் சேர்ந்தவர். பொன்னுத்துரை குணரட்ணம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 22 அக்டோபர் 1992 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு உப்பளத்தில் உள்ள சிறிலங்கா படையினரின் தொடர் காவலரண் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.