மேஜர் சுரேந்தி (நித்திலா) அவர்கள் ஈச்சமோட்டை, கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். நமசிவாயம் சுரேந்திரகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 18 நவம்பர் 1991 அன்று ஜேர்மனியில் ஏற்படட மகிழூந்து விபத்தில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.