வீரவேங்கை மாதுளா (மஞ்சுளா) அவர்கள் வன்னேரிக்குளம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நல்லதம்பி கலாதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது தாயக மண்ணை மீட்டெடுக்கும் புனிதப் போரில் எமது மாவீரர்கள் புரிந்த தியாகங்கள் மகத்தானவை. அவற்றைச் சொற்களால் செதுக்கிவிட முடியாது. உலக வரலாற்றில் எங்குமே, என்றுமே நிகழாத அற்புதங்கள் இந்த மண்ணில், இந்த மண்ணிற்காக நிகழ்ந்திருக்கிறது. அந்த வீரகாவியத்தைப் படைத்த ஆயிரமாயிரம் மாவீரரின் இலட்சியக்கனவு அவர்களது ஆன்மீக தாகம் என்றோ ஒரு நாள் நிறைவு பெறுவது திண்ணம்.