கப்டன் கண்ணன் அவர்கள் ஆண்டான்குளம், அடம்பன், மன்னாரைச் சேர்ந்தவர். தங்கசாமி கேசவன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 2 செப்டம்பர் 1991 அன்று முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.