2-ஆம் லெப்டினன்ட் கலிஸ்ரோ அவர்கள் பழம்பாசி, மணலாறு, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். சதாசிவம் செந்தமிழ்ச்செல்வி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1991 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு சுற்றுலா தங்ககப் படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.