வீரவேங்கை பூபால் அவர்கள் வாழ்க்கைபெற்றான்கண்டல், நானாட்டான், மன்னாரைச் சேர்ந்தவர். நாகேஸ் வடிவேலு என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 19 மார்ச் 1991 அன்று மன்னார் மாவட்டம் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.