கடற்கரும்புலி கப்டன் வினோத் அவர்கள் காட்டுவளவு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். வேலுப்பிள்ளை திலகராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 10 ஜூலை 1990 அன்று யாழ். மாவட்டம் வல்வெட்டித்துறை கடலில் சிறிலங்கா கடற்படை எடித்தாரா கட்டளைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.