கடற்கரும்புலி லெப்.கேணல் விதுசன் (வெள்ளை) அவர்கள் கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். நடராசா விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.