கடற்கரும்புலி லெப்.கேணல் கலைச்செல்வன் (சபீன்) அவர்கள் மல்லாகம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கோபாலசாமி நாகரூபன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 செப்டம்பர் 2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.