லெப்டினன்ட் சாந்தம் அவர்கள் கந்தபுரம், கிளிநொச்சியைச் சேர்ந்தவர். குமாரசாமி வசந்தமலர் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஏப்ரல் 2001 அன்று யாழ். மாவட்டம் எழுதுமட்டுவாள்ப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.