வீரவேங்கை தயாபரன் அவர்கள் ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தம்பிராசா தயாபரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளை கண்டல்ப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரின்போது “மிக் 27” வானூர்தி நடத்திய குண்டு வீச்சில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தமிழீழம் என்ற சுதந்திர தேசம் வரலாற்றின் குழந்தையாக விரைவில் பிறப்பெடுக்கும். அந்த சுதந்திர தேசத்தின் ஆன்மாவாக, ஆளுமையாக எமது மாவீரர்கள் என்றும் எம்முடன் நிலைத்து வாழ்வார்கள்.