லெப்டினன்ட் தயாவதி அவர்கள் புலோலி தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சத்தியநாதன் சத்தியவாணி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் பளை கண்டல்ப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில், சந்துகளில், சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சிகளாகவே எமக்குக் காட்சி தருகின்றன.