வீரவேங்கை வேணுகா (தமிழ்ச்செல்வி) அவர்கள் நயினாமடு, நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்தவர். அருளானந்தம் சியோதா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.