வீரவேங்கை வானரசி (தமிழ்ப்பிரியா) அவர்கள் பன்னாலை, தெல்லிப்பழை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலன் சிவசோதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 25 ஏப்ரல் 2001 அன்று கிளிநொச்சி மாவட்டம் கிளாலிப் பகுதியில் தீச்சுவாலை நடவடிக்கை முறியடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.