கப்டன் சுதனி அவர்கள் ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்தவர். பரமேஸ்வரன் ஜீவரதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 அக்டோபர் 2000 அன்று யாழ். மாவட்டம் நாகர்கோவில்ப் பகுதியில் "ஓயாத அலைகள் - 04" நடவடிக்கையின்போது சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது