வீரவேங்கை தஜந்தி அவர்கள் பாண்டியன்குளம், மல்லாவி, முல்லைத்தீவைச் சேர்ந்தவர். ஏகாம்பரம் பிரியா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 28 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் பகுதி நோக்கிய முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.