வீரவேங்கை அருள்விழி அவர்கள் இலுப்பைக்கடவை, மன்னாரைச் சேர்ந்தவர். மனோகரன் மஞ்சுளா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் நோக்கிய முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள்.