2-ஆம் லெப்டினன்ட் கீர்த்தனா அவர்கள் வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இரட்ணம் கலைமகள் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் நோக்கிய முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள். காலத்தின் குறிப்பேட்டில் கால் பதித்துச் செல்பவர்கள். சாவு அவர்களைத் தீண்டுவதில்லை. அவர்கள் காலத்தின் காவியமாக எமது தேசத்தின் ஆன்மாவில் காலமெல்லாம் நிலைத்திருப்பவர்கள்.