2-ஆம் லெப்டினன்ட் ஈழவள் அவர்கள் 10-ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஞானப்பிரகாசம் மேரிதுசானி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் நோக்கிய முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
தன்னலமற்ற, தமக்கெனப் பயனை எதிர்பாராத விடுதலைத் தொண்டில், தம்மையே அழித்துக்கொள்ளும் அதியுன்னத தியாகிகள் என்பதால், மாவீரர்களுக்கு எமது விடுதலை இயக்கம் பெரும் மதிப்பையும் கௌரவத்தையும் வழங்கிவருகிறது.