கப்டன் ராஜினி அவர்கள் மகாறம்பைக்குளம், வவுனியாவைச் சேர்ந்தவர். நாகேந்திரம் சுதர்சினி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 அக்டோபர் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் அம்பகாமம் நோக்கிய முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தாம் தழுவிக்கொண்ட இலட்சியத்தைத் தமது உயிரிலும் மேலாக நேசித்தவர்கள். மக்களின் விடுதலையை தமது மானசீக இலட்சியமாக, வாழ்வின் உயரிய குறிக்கோளாக வரித்துக் கொண்டவர்கள். அந்த இலட்சியத்திற்காகவே மடிந்தவர்கள்.