மேஜர் யாழிசை அவர்கள் கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பரராஜசிங்கம் மங்கையற்கரசி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூன் 1999 அன்று மன்னார் மாவட்டம் பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணுக்காக மடிந்தார்கள். இந்த மண்ணின் விடிவிற்காக மடிந்தார்கள். எமது மண்ணில் எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டுமென்ற இலட்சியத்திற்காக மடிந்தார்கள்.