2-ஆம் லெப்டினன்ட் தமிழ்க்கவி அவர்கள் குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சாமித்தம்பி உதயராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 21 ஜூன் 1999 அன்று மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளம் பகுதி நோக்கிய ரணகோச நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.