2-ஆம் லெப்டினன்ட் மரக்குமார் அவர்கள் விநாயகபுரம், திருக்கோவில், அம்பாறையைச் சேர்ந்தவர். நடராசா மகேஸ்வரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 14 மே 1999 அன்று மன்னார் மாவட்டம் சிராட்டிக்குளம் பகுதியை நோக்கி முன்னேறிய சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீரசுதந்திர பிரகடனமாகவே சம்பவிக்கின்றது. இந்த நிலத்தின் நெஞ்சில் படுத்துறங்கும் எமது மாவீரர்களின் கல்லறைகளில் இருந்து இந்தச் சுதந்திரப் பிரகடனங்களின் பேரொளி எழுகிறது.