வீரவேங்கை கலையரசன் அவர்கள் சங்குவேலி வடக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். இரவீந்திரன் சதீஸ்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 மார்ச் 1999 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஓட்டிசுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மரணத்தின் பின்னாலும் மாவீரர்களது வாழ்வு தொடர்கிறது. சாவோடு அவர்களது வாழ்வு அடங்கிப்போகவில்லை. அவர்கள் தமிழன்னையின் கருவூலத்தில் நித்திய வாழ்வு வாழ்கிறார்கள். சத்தியத்தின் சாட்சியாக நின்று, மனவலிமையின் நெருப்பாக எரிந்து, எம்மைச் சுதந்திரப் பாதையில் வழிகாட்டி, நெறிப்படுத்திச் செல்கிறார்கள்.