லெப்.கேணல் அதியமான் (ஒஸ்கா) அவர்கள் பனங்கட்டிக்கொட்டு, மன்னாரைச் சேர்ந்தவர். இம்மனுவேல் இமாறல்ட் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 12 ஜனவரி 1999 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.