கப்டன் நிலாந்தன் அவர்கள் சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். தங்கராசா தயாளன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 16 நவம்பர் 1997 அன்று முல்லைத்தீவு மாவட்டம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைப் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.