லெப்டினன்ட் சுதாகரன் அவர்கள் 5-ஆம் வட்டாரம், துறைநீலாவணை, அம்பாறையைச் சேர்ந்தவர். கோபாலப்பிள்ளை ஜீவராசா என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 அக்டோபர் 1997 அன்று வவுனியா மாவட்டம் கரப்புக்குத்தி - விஞ்ஞானகுளப் பகுதியில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மக்களின் விடுதலையென்ற மகத்தான இலட்சியத்தை வரித்து அந்த இலட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த இலட்சியத்தை அடைய உறுதிதளராது போராடி அந்த இலட்சியப் போரில் தமது உயிரையே அர்ப்பணித்த மாவீரர்கள் மகோன்னதமான மனிதப்பிறவிகள்.