ஆனைறவு முன்னகர்வு
ஆனையிறவு படைத்தளத்திலிருந்து தெற்கு நோக்கி முன்னகர முயன்ற சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய போராளிகளின் விபரங்கள்
காட்டப்படுவது 1-20 விபரங்கள் (மொத்தம்: 20 விபரங்கள்)
பக்கம் 1 (மொத்தம்: 1 பக்கங்கள்)
“எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.”
ஆனைறவு முன்னகர்வு பற்றிய விபரம்
ஆனையிறவு முகாமில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறமுயன்ற சிறிலங்கா படையினருக்கெதிராக விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட இருபத்தைந்திற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டனர். ஐம்பதிற்கு மேற்பட்ட படையினர் படுகாயம் அடைந்தனர். படையினரின் சிதைந்த சடலங்கள் ஆறும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. 27.04.1991 அன்று அதிகாலை பரந்தன், ஆனையிறவு சந்தை, தட்டுவான் கொட்டி ஆகிய பகுதிகளை நோக்கி ஆனையிறவு முகாமில் இருந்து சிறிலங்கா படையினர் முன்னேற எத்தனித்தவேளை விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படையினருக்குமிடையில் கடுமோதல் மூண்டது. இந்த மோதலின்போது படையனருக்குத் துணையாக மூன்று குண்டுவீச்சு வானூர்திகளும், ஒரு அவ்ரோ ரக வானூர்தியும், மூன்று உலங்கு வானூர்திகள் தாக்குதலை மேற்கொண்டன. அதிகாலை 5.30 மணியில் இருந்து மாலை 5-00 மணிவரை நீடித்த இந்த மோதலில் 20 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்