லெப்டினன்ட் சந்திரபவான் (சந்திரகாந்) அவர்கள் 4-ஆம் குறிச்சி, இருதயபுரம் மேற்கு, மட்டக்களப்பைச் சேர்ந்தவர். சின்னத்தம்பி நவரவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 6 மார்ச் 1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு சிறிலங்கா படைமுகாம் மற்றும் கட்டளைத் தலைமையகம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.