கப்டன் தமிழ்வதனன் அவர்கள் சாம்பல்தீவு, திருகோணமலையைச் சேர்ந்தவர். அழகுதுரை ஜெகசோதி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 23 ஜனவரி 1997 அன்று திருகோணமலை மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து தக்கியதில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள், சுதந்திரச் சிற்பிகள், எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.