வீரவேங்கை குமாரவேல் அவர்கள் 3-ஆம் வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சுந்தரலிங்கம் சுதாகரன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 7 நவம்பர் 1996 அன்று வவுனியா மாவட்டம் கணேசபுரப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் 25 காவலரண்கள் தாக்கியழிக்கப்பட்ட சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
மாவீரர்களது அற்புதமான இலட்சிய வாழ்க்கை, அவர்களது தியாகங்கள், அவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள், ஏக்கங்கள், அவர்கள் கண்ட கனவுகள் இவை எல்லாவற்றினதும் ஒட்டுமொத்த வெளிப்பாடகவே எமது போராட்ட வரலாறு முன்னேறிச் செல்கின்றது. எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால், வியர்வையால், கண்ணீரால் எழுதப்பட்டது.