லெப்.கேணல் சிவாஜி அவர்கள் கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். கிருஸ்ணன் சிறிக்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாகக் கடமையாற்றினார். 17 ஆகஸ்ட் 1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு ஒரு சாதாரண சாவு நிகழ்வு அல்ல. எமது தேச விடுதலையின் ஆன்மீக அறைகூவலாகவே மாவீரர்களது மரணம் நிகழ்கின்றது. எமக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் வீழ்கின்றார்கள்.