வீரவேங்கை கரிகாலன் அவர்கள் புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். பாலசிங்கம் கணேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 17 ஆகஸ்ட் 1996 அன்று யாழ். மாவட்டம் வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான திடீர் மோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
“
விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.