கப்டன் செம்மாணன் (மாயவன்) அவர்கள் சின்னவத்தை, மாலயர்கட்டு, அம்பாறையைச் சேர்ந்தவர். நல்லதம்பி யோகநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 26 ஜூலை 1996 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவிலிருந்து பரந்தன் நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்னகர்விற்கு எதிரான சமரில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.