2-ஆம் லெப்டினன்ட் மகேசன் அவர்கள் புன்னாலைக்கட்டுவான் தெற்கு, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். மணியம் உதயகுமார் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 15 ஜூன் 1996 அன்று யாழ். மாவட்டம் தென்மராட்சிக் கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான நேரடிமோதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்டார்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிழந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டுநிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.